செய்திகள்
பாராளுமன்றம், டெல்லி

காஷ்மீர் விவகாரம் - பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் நோட்டீஸ்

Published On 2019-08-05 04:13 GMT   |   Update On 2019-08-05 04:13 GMT
ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் அசாதாரணமான நிலவரம் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் சார்பில் இன்று நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீரில் நிகழும் பதற்றம் தொடர்பாக ஸ்ரீநகரில் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் அசாதாரணமான நிலவரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி பாராளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுரேஷ், மனிஷ் திவாரி ஆகியோர் இன்று நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இந்த ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு சபாநாயாகர் ஒப்புதல் அளித்தால் மக்களவையில் இன்று அனல் பறக்கும்  விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News