செய்திகள்
வெட்டப்பட்ட மரங்கள்

5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வெட்டப்பட்ட ஒரு கோடி மரங்கள்

Published On 2019-07-30 06:56 GMT   |   Update On 2019-07-30 06:56 GMT
மத்தியில் ஆளும் பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி:

இந்தியாவில் வளர்ச்சி திட்டங்களுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன? என மக்களவையில் எம்பி ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபூல் சுப்பிரியோ பதிலளித்தார்.

எழுத்துப்பூர்வமான அந்த பதில் படிவத்தில், 'இந்தியாவில் இதுவரை வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக கடந்த 2014-19 ஆண்டு வரை 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 26.09 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

அதேபோல, 2014-15ஆம் ஆண்டு 23.3 லட்சம் மரங்களும், 2015-16ம் ஆண்டில் 17.01 மரங்களும், 2017-18ம் ஆண்டு 25.5 லட்சம் மரங்களும் வெட்டப்பட்டது. இவை அனைத்தும் பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்களுக்காக உரிய அனுமதி பெற்றுதான் வெட்டப்பட்டுள்ளன' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே சமயம், 4 ஆண்டுகளில் 12 மாநிலங்களுக்கு மரம் நட 237.07 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News