செய்திகள்
புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர்கள் நினைவாக டெல்லியில் பிரமாண்ட அருங்காட்சியகம் - பிரதமர் அறிவிப்பு

Published On 2019-07-24 13:21 GMT   |   Update On 2019-07-24 13:21 GMT
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நினைவாக டெல்லியில் பிரமாண்டம்ான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல் மந்திரி காமராஜர் வாழ்ந்த இல்லம் மற்றும் சில முன்னாள் முதல் மந்திரிகளின் இல்லங்களை அவர்களின் நினைவிடங்களாக்கி மாநில அரசு பராமரித்து வருகின்றது. இந்த நினைவிடங்களில் அவர்களின் வாழ்க்கை தொடர்பான புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மற்ற மாநிலங்களிலும் மறைந்த முன்னாள் முதல் மந்திரிகளுக்கு நினைவிடங்களும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கெல்லாம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகைதந்து, பல ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தலைவர்களின் சிறப்புகளை அறிந்துச் செல்கின்றனர்.



அவ்வகையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நினைவாக டெல்லியில் பிரமாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வாழ்க்கை தொடர்பான ஒரு புத்தகம் டெல்லியில் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்த புத்ததகத்தை வெளியிட்டு பேசிய மோடி, 1977-ம் ஆண்டில் டெல்லி விமான நிலையத்தில் சந்திரசேகரை முதன்முதலாக சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

அப்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நினைவாக டெல்லியில் பிரமாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதற்காக,  முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை தொடர்பான முக்கிய குறிப்புகளை அனுப்பி வைக்குமாறு அவர்களின் குடும்பத்தாரை நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் மோடி தெரிவித்தார்.
Tags:    

Similar News