செய்திகள்
பிரதமர் மோடி

ஊட்டச்சத்து பற்றாக்குறை மீது கவனம் செலுத்துங்கள் - பாஜக பெண் எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு

Published On 2019-07-12 12:21 GMT   |   Update On 2019-07-12 12:21 GMT
சுகாதாரம், வடிகால், குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஒழிப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு பாஜகவை சேர்ந்த பெண் எம்.பி.க்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள பாஜக எம்.பி.க்களை அக்கட்சியின் தலைமை 5 குழுக்களாக பிரித்து நிர்வகித்து வருகிறது. இளம்வயதினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர்கள், பெண்கள் என தனிக்குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இவர்களை பிரதமர் நரேந்திர மோடி குழுவாரியாக சந்தித்து ஆலோசனைகளை அளித்து வருகிறார்.

அவ்வகையில், மக்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள பாஜக பெண் எம்.பி.க்கள் குழுவை தனது இல்லத்தில் பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இதில் முப்பதுக்கும் அதிகமான எம்.பி.க்கள் பங்கேற்று பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடினர்.

அவர்களின் கருத்துகளை பொறுமையுடன் கேட்ட மோடி, ’மென்மையாக பேசும் இயல்புடையவர்கள் என்பதால் பெண்களால் மக்களை மிகவும் எளிதாக அணுக முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு அமைப்பை போன்றவர்கள்.

சுகாதார வசதி, வடிகால் வசதியை மேம்படுத்துவது மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஒழிப்பது தொடர்பாக நீங்கள் எல்லாம் அதிக  கவனம் செலுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.
Tags:    

Similar News