செய்திகள்
மத்திய மந்திரி கேங்வார்

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதாக வரும் தகவல்கள் தவறு- மத்திய மந்திரி கேங்வார்

Published On 2019-07-01 09:41 GMT   |   Update On 2019-07-01 09:41 GMT
வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அரசு முன்னுரிமை கொடுப்பதாகவும் மத்திய மந்திரி கேங்வார் கூறினார்.
புதுடெல்லி:

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்பி அடூர் பிரகாஷ் பேசும்போது, நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதாக கூறினார். மேலும், ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசிடம் மாஸ்டர் பிளான் ஏதாவது இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.



இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை மந்திரி சந்தோஷ் கேங்வார் அளித்த பதில் வருமாறு:-

வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அரசு முன்னுரிமை கொடுக்கிறது. வேலைவாய்ப்பு நிலைமை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக உள்ளேன்.

வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்.

வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதிவரை  5,86,728 நபர்கள் வேலை பெற்றுள்ளனர். மார்ச் 31-ம் தேதி வரை மத்ரா திட்டத்தின்கீழ் 18.26 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Tags:    

Similar News