செய்திகள்
கனகதுர்க்கா

சபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் - கனகதுர்க்கா

Published On 2019-07-01 08:21 GMT   |   Update On 2019-07-01 08:21 GMT
எனக்கு மீண்டும் அனுமதி கிடைத்தால் சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய விருப்பமாக உள்ளேன் என்று கனக துர்க்கா கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக தடை இருந்து வந்தது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இந்த தடை நீங்கியது. அதே சமயம் சபரிமலை ஐதீகத்தை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.



இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைச் சென்று சாமி தரிசனம் செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஒவ்வொரு முறை சபரிமலை கோவிலின் நடை திறக்கும் போது இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல தொடங்கி உள்ளனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்துவதால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பற்றி கனக துர்க்கா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் சபரிமலைச் சென்று சாமி தரிசனம் செய்தது தொடர்பாக எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. எனக்கு மீண்டும் அனுமதி கிடைத்தால் சபரிமலைச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய விருப்பமாக உள்ளேன்.

பினராயி விஜயன் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம், பெண்கள் மறுமலர்ச்சி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எந்த கட்சியும் என்னை பின்னால் இருந்து இயக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News