என் மலர்
நீங்கள் தேடியது "Ayyappan"
- அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அய்யப்பன் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.
செங்கோட்டை:
அண்டை மாநிலமான கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சாஸ்தாவான அய்யப்பன் ஐந்துமலைக்கு அதிபதியாவர். அவர் அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருக்கல்யாணம்
இதில் ஆரியங்காவு கோவிலில் குடி கொண்டுள்ள அய்யப் பனுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மகோற்சவ விழா கூடுதல் தனிசிறப்பாகும். இந்த விழா முடிவில் பகவதி அம்மனுடன் திருமணம் நடைபெறுவது ஐதீகம்.
நிறைவு நாளுக்கு முன்பு அய்யப்பன் கோவிலில் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் சுவாமி- அம்பாள் தனித்தனியாக அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் கோவிலை வலம் வந்து வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
பாண்டி முடிப்பு
அதன்படி கடந்த 16-ந் தேதி மகோற்சவம் விழா தொடங்கியதையடுத்து ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் பாண்டி முடிப்பும் நடைபெற்றது.பெண் அழைப்பு நிகழ்ச்சியானது ஆரியங்காவு அருகே மாம்பழத்துறை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக நடந்தது.
தொடர்ந்து மணப் பெண்ணிற்கு பட்டு, மாலை வழங்குதல், சீர்வரிசை செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியது.நேற்றிரவு அய்யப்பனும், அம்பாளும் அலங்கரிக்கபட்ட தனி சப்பரத்தில் கோவில் வெளிபிரகாரத்தை வலம் வந்து பின் வசந்த மண்டபத்தில் கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று அய்யப் பனின் திருமண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
- ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
- ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீஹரிஹரசுதன் மணிமண்டபத்தில் எழுந்தருளிய ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
அதன்பின்னர் மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சாலை சந்தன கருப்பணசாமி கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு, மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக மகா காளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு மகா காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியை சுற்றிலும் பூக்களை வைத்திருந்தனர். மேலும் எங்க கருப்பணசாமி எனும் பக்தி பாடல் ஒலித்து கொண்டிருக்க, காளி மற்றும் கருப்பணசாமி வேடம் அணிந்தவர்கள் ஆக்ரோஷமாக ஆடி கொண்டிருந்தனர்.
அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்த மஞ்சள் நிற சேலையை ஐயப்ப பக்தர்கள் எடுத்து வந்தனர். பின்னர் தகதகவென காணப்பட்ட பூக்குழியில் அந்த மஞ்சள் சேலையை விரித்தனர்.
அடுத்த நொடியே மஞ்சள் சேலை தீப்பிடித்து எரிந்தது. அவ்வாறு தீப்பிடித்து எரிந்த சேலை மேலே எழும்பி வானத்தில் பறந்து சென்றது. அது வானில் நெருப்பு பிழம்பு பறப்பது போன்று இருந்தது. இதனை ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் அதிசயத்துடன் பார்த்தனர்.
மேலும் காணிக்கையாக செலுத்திய மஞ்சள் சேலையை மாரியம்மன் ஏற்று கொண்டதாக பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். பூக்குழியில் போர்த்திய மஞ்சள் சேலை தீப்பற்றி வானில் பறந்த சம்பவம் அனைவரையும் பரவசமடைய செய்ததது. இதைத்தொடர்ந்து பூக்குழி கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணா நகர் செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சார்பில், திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பஜனை வழிபாடு மூலம் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சூண்டி திருக்கல்யாண மலையை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெரிய சூண்டி சித்தி விநாயகர் கோவிலை இரவு 11 மணிக்கு அடைந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அய்யப்பன் அவதார நட்சத்திர தின விழா நடந்தது.
- அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் சார்பில் கலியுக வரதன் சபரிமலை அய்யப்பன் அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜை நடந்தது. சங்கத் தலைவர் முத்து இருளாண்டி தலைமை தாங்கினார்.
செயலாளர் முத்துராஜ், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தது. அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர். அன்னதானம் நடந்தது.
- கொடி மரத்தின் உச்சியில் ஐயப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.
- சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.
மகர சங்கரம பூஜை
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு (தை முதல் நாள்) கடக்கும் வேளையில் மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இவ்வேளையில் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிக் குளிப்பவர்களும், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்பவர்களும் புண்ணிய பலன்களைப் பெறுகிறார்கள். சங்கரம வேளையில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யினை ஒரு துளி சாப்பிட்டால் கூட எல்லாவித நோய்களும் குணமாகும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
திருவாபரணங்கள்
ஐயப்பனின் திருமுகம், ஐயப்பனின் உடல் பாகம் பொன்னால் செய்யப்பட்ட 2 வாள்கள், தங்கத்தால் செய்யப்பட்ட 2 யானைகள், 2 லட்சுமி உருவங்கள், தங்க ஒட்டியாணம், தங்கச்சங்கு, அழகிய முத்து மணி மாலைகள் இன்னும் பல கலைப்பூர்வமான ஆபரணங்கள் அதில் உள்ளன.
கடுத்த சுவாமிக்கு சுருட்டு
ஐயப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள். மேலும் பந்தள ராஜாவிற்காகயுத்தங்களில் வென்று வாகை சூடிய தாகக் கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது. கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு. இவருக்குப் பொரி, அவல், மிளகு, பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். கடுத்த சுவாமிக்குச் சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர். பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார். கருப்ப சாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.
கொடி மரம் விசேஷம்
சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான். கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள். கொடி மரத்தின் உச்சியில் ஐயப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது. கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது. சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது. இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும். எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.
- சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகள் சிறப்பு வாய்ந்தவை.
- 18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு.
18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.
ஒன்றாம் திருப்படி - குளத்துப்புழை பாலகன்
இரண்டாம் திருப்படி - ஆரியங்காவு ஐயப்பன்
மூன்றாம் திருப்படி - எரிமேலி சாஸ்தா
நான்காம் திருப்படி - அச்சங்கோயில் அரசன்
ஐந்தாம் திருப்படி - ஐந்துமலை அதிபதி
ஆறாம் திருப்படி - வீரமணிகண்டன்
ஏழாம் திருப்படி - பொன்னம்பல ஜோதி
எட்டாம் திருப்படி - மோகினி பாலன்
ஒன்பதாம் திருப்படி - சிவபாலன்
பத்தாம் திருப்படி - ஆனந்தமயன்
பதினோராம் திருப்படி - இருமுடிப்பிரியன்
பனிரெண்டாம் திருப்படி - பந்தளராஜ குமாரன்
பதிமூன்றாம் திருப்படி - பம்பாவாசன்
பதினான்காம் திருப்படி - வன்புலி வாகனன்
பதினைந்தாம் திருப்படி - ஹரிஹரசுதன்
பதினாறாம் திருப்படி - குருநாதன்
பதினேழாம் திருப்படி - சபரிகிரி வாசன்
பதினெட்டாம் திருப்படி - ஐயப்பன்
- நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும்தான்.
- உலக உயிர்கள் அனைத்தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார்.
சபரிமலை ஐயப்பன் தியானபிந்து ஆசனத்தில் அபயசின் முத்திரையிலும், கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள்பாலிக்கிறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும்தான்.
ஐயப்பன் லிங்க வடிவில் ஆண் தன்மையாகவும், சங்கு வடிவில் பெண் தன்மையாகவும் இரண்டறக் கலந்து உலக உயிர்கள் அனைத்தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார். ஐயப்பன் சிவனைப்போல் தியான கோலத்திலும் விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் அருள் பாலிப்பது மிகவும் விசேஷமாகும். மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.
யோக நிலையில் காலை வைத்து, வயிற்றை அழுத்தி, மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியை ஞான சக்தியாக மாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இருப்பதால் தான் தன்பக்கம் பக்தர்களை இவ்வளவு அதிகமாக ஈர்க்க முடிகிறது.
ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.
- 26-ந்தேதி பள்ளி வேட்டை புறப்பாடு நடைபெற உள்ளது.
- 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவில் போல அமைந்துள்ள இந்த கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் தலைமை குருசாமி மோகன் தலைமையில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வல்லபை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையையொட்டி நேற்றுகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் தலைமை குருசாமி மோகன் தலைமையில் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது.
அன்று காலை 6 மணிக்கு தங்கக்கொடி மரத்தில் கோவிலின் கொடியை பக்தர்கள் சுவாமியே, சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துடன் ஏற்றினர்.
இதைத்தொடர்ந்து தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பூத பலி பூஜை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு பள்ளி வேட்டை புறப்பாடு மற்றும் நகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் கோவில் நடைபாதை அடைக்கப்படும்.
தொடர்ந்து வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று காலை 8 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளல் மற்றும் நீராட்டுவிழா, கொடியிறக்கம் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அன்று மாலை கலந்து கொள்ளக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.
- அச்சன்கோவில் தர்மசாஸ்தாகோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
- இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கோட்டை:
தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அய்யப்பன் அரசராக இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் இரு மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா செண்டை மேளம் முழங்க வானவேடிக்கையுடன் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. இதில் தமிழகம், கேரள மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து இன்று முதல் 4 நாட்கள் திருவிழாக்களில் உற்சவபலி பூஜை, 7,8-ம் திருநாள் விழாக்களில் கருப்பன் துள்ளல், 9-ம் திருவிழா அன்று தேரோட்டம், 10-ம் திருவிழா நாளன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா மற்றும் 27-ந் தேதி அன்று மண்டல பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியுடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
- அச்சன்கோவிலில் ஐயப்பனுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
விழாவின்போது அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டியில் அய்யப்பனின் தங்க வாள் உள்ளது. இந்த தங்க வாளானது இடத்திற்கு இடம் எடை மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் அய்யப்பனின் தங்க கவசம் மற்றும் கருப்பனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கவசம் மற்றும் ஆபரணங்கள் உள்ளது.
இந்த ஆபரண பெட்டி கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து அங்குள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று காலை எடுத்து வரப்பட்டது. அங்கு கேரள பக்தர்கள் ஆபரண பெட்டியில் உள்ள ஆபரணங்களை தரிசனம் செய்தனர்.
பின்னர் புனலூரில் செண்டைமேளங்கள் முழங்க யானை முன்செல்ல ஆபரண பெட்டிக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட தென்காசி ஆபரண பெட்டி வரவேற்பு குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிகரனின் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
பின்னர் ஆரியங்காவு, செங்கோட்டை வழியாக தென்காசிக்கு மதியம் 1.56 மணிக்கு தமிழக, கேரள போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் ஆபரண பெட்டிக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு வந்த ஆபரண பெட்டிக்கு திரளான பக்தர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையாக நின்று ஆபரண பெட்டியை தரிசித்தனர். தொடர்ந்து மதியம் 3.20 மணிக்கு தென்காசியில் இருந்து அச்சன்கோவிலுக்கு ஆபரண பெட்டி கொண்டு செல்லப்பட்டது.
அச்சன்கோவிலில் ஐயப்பனுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) காலை அச்சன்கோவிலில் கொடியேற்றத்துடன் மண்டல மகோற்சவ திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
- மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் வதம் செய்தார்.
- சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.
மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற தேவதை போன்ற அழகிய பெண் வெளிவந்து ஐயப்பனை வணங்கி "நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வேண்டும்.
என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினாள். மணிகண்டனாகிய ஐயப்பன் அவளிடம் "நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன். எனவே உன்னை ஏற்க இயலாது" என்று கூறி அவளது வேண்டுகோளை நிராகரித்தார். அதோடு அந்தப் பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் கோயிலில் மாளிகைப்புறத்தம்மா என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி பக்தர்கள் மாளிகைப் புறத்தம்மன் எனக் கூறப்படும் மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர். சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.
திருமணம் கை கூடுவதற்காக சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டு கொடுத்து ஒன்றைத்திரும்ப வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.