செய்திகள்

விவசாயத்தைவிட பால் உற்பத்தி மூலம் அதிக வருமானம்- பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்

Published On 2019-06-25 09:33 GMT   |   Update On 2019-06-25 09:39 GMT
விவசாயத்தைவிட பால் உற்பத்தி மூலம் அதிக வருமானம் கிடைப்பதாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். இதனிடையே கடந்த 17-ந் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. 

இந்நிலையில், உள்நாட்டு பசு இனங்களின் பாதுகாப்பு குறித்து பாஜக எம்.பி. ரவி கிஷான் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கால்நடை, பண்ணைத்தொழில் மற்றும் மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:-

கோகுல் திட்டத்தின் கீழ் உள்நாட்டு பசு இனங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பசு இனங்களுக்கு இணையாக உள்நாட்டு பசு இனங்களும் உயரும். மேலும், விவசாயத்தைவிட பால் உற்பத்தி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. 



செயற்கை கருவூட்டல் முறையில் உள்நாட்டு பசு இனத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசு உள்நாட்டு பசுக்களை பாதுகாக்கும் நோக்கில் 4 ஆயிரம் கோசாலைகளை அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. 

இவ்வாறு அவர் கூறினார்.  
Tags:    

Similar News