செய்திகள்

பயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல்: ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்கு

Published On 2019-06-22 09:40 GMT   |   Update On 2019-06-22 09:40 GMT
இந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.

புதுடெல்லி:

கடந்த 2009-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிளாடஸ் விமான நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு 75 பயிற்சி விமானங்களை வாங்கியது.

இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்ட இந்த பயிற்சி விமானத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. ரூ.339 கோடிக்கு லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த பயிற்சி விமானம் வாங்கியதில் சஞ்சய் பண்டாரி என்பவர் ஆயுத தரகராக செயல்பட்டார். இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.

பயிற்சி விமானம் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை பதவி செய்து இருந்தது.

இந்த நிலையில் சி.பி.ஐ.யும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் பண்டாரி மற்றும் பெயர் தெரிவிக்கப்படாத இந்திய விமானப்படை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், சுவிட்சர்லாந்து நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மீது சி.பி.ஐ. இன்று வழக்குப்பதிவு செய்தது.

அதோடு சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துகிறார்கள்.

சஞ்சய்பண்டாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருப்பது ராபர்ட் வதேராவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News