செய்திகள்

சித்து, அரசியலில் இருந்து எப்போது விலகுவீர்கள்? -பஞ்சாப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

Published On 2019-06-22 08:54 GMT   |   Update On 2019-06-22 10:45 GMT
அமேதியில் ராகுல் காந்தியின் தோல்விக்கு பொறுப்பேற்று நவ்ஜோத் சித்து அரசியலில் இருந்து விலகுவது எப்போது? என பஞ்சாப் மாநிலம் முழுவதும் போஸ்டர் யுத்தம் நடைப்பெற்று வருகிறது.
சண்டிகர்:

பஞ்சாப் மாநில மந்திரியும்,  காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து, பாராளுமன்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஒரு முறை, ‘காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் நான் அரசியலை விட்டு உடனடியாக விலகுவேன்’ என கூறியிருந்தார்.

இதனையடுத்து நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஸ்மிரிதி இரானி வெற்றிப் பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் படுதோல்வி அடைந்திருந்தது.



இந்நிலையில் நவ்ஜோத் சித்து அரசியலில் இருந்து விலகுவது குறித்த கேள்வி எழுப்பி பஞ்சாப்பில் உள்ள லுதியானாவின் பல்வேறு பகுதிகளில் சித்துவின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இவற்றில், ‘சித்து, நீங்கள் எப்போது அரசியலில் இருந்து விலகுவீர்கள்? நீங்கள் சொன்னதை நிறைவேற்றும் நேரம் இது. நீங்கள் விலகுவதற்காக காத்திருக்கிறோம்’ என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்கள் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News