காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது 49வது பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று 49 வது பிறந்த நாள். பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக அவர் தனது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடவில்லை.
இருப்பினும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காலை முதலே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சோனியா, பிரியங்கா ஆகியோர் ராகுலை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
#WATCH: Congress President Rahul Gandhi distributes sweets among media personnel on his birthday today, at AICC Headquarters. pic.twitter.com/rnCVvaWcsC
— ANI (@ANI) June 19, 2019இதனால் இன்று காலை சமூக வலைத்தளங்களில், “#HappyBirthdayRahulGandhi” எனும் ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆக மாறியது. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் , “ராகுல்காந்திக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்” என தன் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு ராகுல் காந்தி வரும் வழியில் செய்தி சேகரிக்க மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்க வந்திருந்த செய்தியாளர்களுக்கு தானே இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். அவருக்கு செய்தியாளர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.