செய்திகள்

தெலுங்குதேசம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் - சந்திரபாபு நாயுடு

Published On 2019-05-28 22:57 GMT   |   Update On 2019-05-28 22:57 GMT
தெலுங்குதேசம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
அமராவதி:

பாராளுமன்ற தேர்தலிலும், ஆந்திர சட்டசபை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

தேர்தல் தோல்விக்கு பின்னர், குண்டூரில் நேற்று நடந்த கட்சி நிறுவனர் என்.டி.ராமாராவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. அவர்களுக்கு நாம் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும். அவர்கள் சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவிடுவோம்” என்றார்.

மேலும், “நமது கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாம் மக்களுக்கு பணி ஆற்றுவோம். நாம் நமது தவறுகளை ஆராய்ந்து சரி செய்வோம். மக்கள் பணியில் நம்மை மறுஅர்ப்பணம் செய்வோம்” எனவும் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News