செய்திகள்

சீதாராம் யெச்சூரி மீது பாபா ராம்தேவ் போலீசில் புகார்

Published On 2019-05-04 14:16 GMT   |   Update On 2019-05-04 14:16 GMT
வன்முறையுடன் இந்து மதத்தை தொடர்புப்படுத்தி பேசியதாக மா.கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது யோகா குரு பாபா ராம்தேவ் போலீசில் புகார் அளித்தார். #Ramdevlodgescomplaint #complaintagainstYechury #Hinduismwithviolence
டேராடூன்:

இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்னும் பொருள்படும் வகையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருவது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘ராமாயணம், மகாபாரதத்தில் இல்லாத வன்முறையா? அவற்றில் இல்லாத போர் முறைகளா?’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது இந்த கருத்து இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் வன்முறையுடன் இந்து மதத்தை தொடர்புப்படுத்தி பேசியதற்காக சீதாராம் யெச்சூரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஹரித்வார் காவல் நிலையத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் இன்று எழுத்து மூலமாக புகார் அளித்தார். 

அவரது புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளதாக  ஹரித்வார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். #Ramdevlodgescomplaint #complaintagainstYechury #Hinduismwithviolence
Tags:    

Similar News