செய்திகள்

ரபேல் விவகாரத்தில் சீராய்வு - சுப்ரீம் கோர்ட்டிடம் அவகாசம் கேட்கும் மத்திய அரசு

Published On 2019-04-29 06:19 GMT   |   Update On 2019-04-29 08:00 GMT
ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. #CentralGovernment #Rafalecase
புதுடெல்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்தும், ரபேல் விவகாரத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான சில ஆவணங்களின் அடிப்படையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நாளை (30-ம் தேதி) விசாரணை நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது.



அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதால் இதுதொடர்பாக இவ்வழக்கின் கட்சிக்காரர்களுக்கு கடிதம் அனுப்ப மத்திய அரசு வக்கீல் அனுமதி கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. எனவே, இவ்வழக்கு நாளைய தினத்துக்கு பதிலாக வேறொரு தேதியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #CentralGovernment #Governmentseekstime #Rafalecase #Rafalereviewpetition
Tags:    

Similar News