செய்திகள்

பாஜகவின் கடைசி தொண்டன் உயிருடன் உள்ளவரை காஷ்மீரை பிரிக்க முடியாது - அமித் ஷா

Published On 2019-04-12 16:59 GMT   |   Update On 2019-04-12 16:59 GMT
பாரதிய ஜனதா கட்சியின் கடைசி தொண்டன் உயிருடன் உள்ளவரை இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகவுன் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று பங்கேற்று உரையாற்றினார்.

அம்மாநிலத்தில் உள்ள 11 பாரளுமன்ற தொகுதிகளிலும் பாஜக அபார வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமர் தேவை என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்த கருத்து தொடர்பாக ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

காஷ்மீருக்கென தனியாக ஒரு பிரதமர் நியமிக்கப்பட்டால் இந்தியாவில் இரண்டு பிரதமர்கள் ஆட்சி செய்வதை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்கிறாரா? என வினவிய அமித் ஷா, பாஜகவில் கடைசி தொண்டன் உள்ளவரை இந்தியாவில் இருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது என கூறியுள்ளார். #BJPworker #Amit Shah 
Tags:    

Similar News