செய்திகள்

வெயிலை சமாளிக்க சிறந்த வழி - ஆட்டோ ரிக்‌ஷாவில் தோட்டம் வளர்க்கும் டிரைவர்

Published On 2019-04-03 11:38 GMT   |   Update On 2019-04-03 12:02 GMT
கோடை வெயில் மண்டையை பிளக்க தொடங்கியுள்ள நிலையில் கொல்கத்தாவில் ஒருவர் தனது ஆட்டோ ரிக்‌ஷாவின் மேல்பகுதியில் அழகிய தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார். #gardenatopauto #Kolkataautodriver
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருபவர் பிஜோய் பால். பசுமை விரும்பியான இவர் தனது ஆட்டோவில் ‘மரங்களை பாதுகாத்து உயிர்களை காப்பாற்றுங்கள்’என்ற பொன்மொழி வாசகங்களை எழுதி வைத்துள்ளார்.

மேலும், இது வெறும் வாய் வார்த்தையாகவோ, விளம்பரமாகவோ கருதப்படாமல் பல பசுமை ஆர்வலர்களை உருவாக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் தனது ஆட்டோ ரிக்‌ஷாவின் மேற்கூரையில் புல்வெளி மற்றும் அழகிய பூச்செடிகளுடன் சிறிய தோட்டம் ஒன்றையும் அமைத்து பராமரித்து வருகிறார்.

மக்களிடையே பசுமையின் தேவைக்கான விழிப்புணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இவர் செய்துவரும் இந்த பிரசாரம் பலரையும் ஈர்த்துள்ளது. இவரைப் பற்றிய தகவல் தற்போது பல சமூக ஊடகங்களின் வாயிலாக செய்தியாக பரவி வருகிறது.

வெறும் பசுமை முயற்சியாக மட்டும் இல்லாமல் இந்த கோடைக்காலத்தில் ஆட்டோவில் அமர்ந்துவரும் பயணிகளுக்கு புதுமையான முறையில் குளிர்ச்சியை அளிக்கும் வகையில் பிஜோய் பால் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #gardenatopauto #Kolkataautodriver 
Tags:    

Similar News