செய்திகள்

மக்கள் விருப்பப்படி சிலைகள் அமைத்தேன் - சுப்ரீம் கோர்ட்டில் மாயாவதி விளக்கம்

Published On 2019-04-02 22:35 GMT   |   Update On 2019-04-02 22:35 GMT
மக்கள் விருப்பப்படி தான் என்னுடைய சிலையையும், கட்சியின் சின்னத்தையும் அமைத்தேன் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். #Mayawati #SupremeCourt
புதுடெல்லி:

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இருந்தபோது சுமார் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் மாநிலம் முழுவதும் அவருடைய சிலையையும், அவருடைய கட்சி சின்னமான யானை சிலையையும் அமைத்து மக்கள் பணத்தை வீணடித்ததாக சுப்ரீம் கோர்ட்டில் 2009-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த சிலைகள் வைத்த பணத்தை மீண்டும் அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும் என மாயாவதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.



இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாயாவதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-

துறவிகள், மதகுருமார்கள், சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல்வாதிகள் சிலைகளை வைப்பது அவர்களின் மதிப்பு மக்களுக்கு தெரியவைப்பதற்காக தானே தவிர, பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் சின்னத்தையும் அடையாளத்துக்காக வைப்பதற்காக இல்லை. மக்கள் விருப்பப்படி தான் என்னுடைய சிலையையும், கட்சியின் சின்னத்தையும் அமைத்தேன். மேலும் சிலைகள் வைத்ததால் அரசின் பணம் விரயமானதாக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
Tags:    

Similar News