செய்திகள்

திகார் சிறையில் நாப்கின் தயாரிப்பு கூடம்- மகளிர் தினத்தில் திறப்பு

Published On 2019-03-09 04:45 GMT   |   Update On 2019-03-09 04:45 GMT
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திகார் சிறைச்சாலையில் பெண்களுக்கு உதவும் வகையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு கூடம் திறக்கப்பட்டது. #SanitaryNapkin #TiharJail
புதுடெல்லி:

உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்களை கவுரவிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திகார் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில், நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பிரிவை சிறைத்துறை இயக்குநர் அர்ச்சனா காஷ்யப் திறந்து வைத்து உற்பத்தியை துவக்கி வைத்தார். பாகல் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த நாப்கின் தயாரிப்பு கூடம் நிறுவப்பட்டுள்ளது.

விழாவில் பெண் கைதிகள் பங்கேற்ற பேஷன் ஷோ, பெண் கைதிகளின் குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பணியிடங்களில் பாலியல் தொந்தரவை தடுப்பது தொடர்பாக தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது. #SanitaryNapkin #TiharJail
Tags:    

Similar News