செய்திகள்

அபினந்தன் தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி - விமானப்படை தளபதி பேட்டி

Published On 2019-03-01 16:45 GMT   |   Update On 2019-03-01 16:45 GMT
இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என விமானப்படை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்துள்ளார். #AbhinandanReturn #WelcomeHero #WelcomeHomeAbhinadan #RGKKapoor
புதுடெல்லி:

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார்.

இன்று மாலை அபினந்தன் வாகா எல்லை வந்தடைந்தார். ஆனால், அவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என விமானப்படை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆர் ஜி கே கபூர் கூறுகையில், இரு நாடுகளின் நடைமுறைப்படி விமானப்படை வீரர் அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். வழக்கமான நடைமுறைப்படி அபினந்தன் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார். அபினந்தன் தாயகம் திரும்பியதில் இந்திய விமானப்படை மகிழ்ச்சி அடைகிறது என குறிப்பிட்டுள்ளார். #AbhinandanReturn #WelcomeHero #WelcomeHomeAbhinadan #RGKKapoor
Tags:    

Similar News