செய்திகள்

கடும் பனி மூட்டம் எதிரொலி - ‘வந்தே பாரத்’ ரெயில் முதல் நாளிலேயே தாமதம்

Published On 2019-02-19 00:52 GMT   |   Update On 2019-02-19 00:52 GMT
நாட்டின் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் தனது முதல் பயணத்திலேயே காசியாபாத்-துண்ட்லா இடையே கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக வந்தடைந்தது. #VandeBharatExpress #Varanasi
புதுடெல்லி:

நாட்டின் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மணிக்கு சராசரியாக 130 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தனது வர்த்தக ரீதியான பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த முதல் பயணத்திலேயே தடங்கல் ஏற்பட்டது. அதாவது காசியாபாத்-துண்ட்லா இடையே கடும் பனிமூட்டம் இருந்ததால் ரெயில் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலேயே இயக்கப்பட்டது. இதனால் முதல் பயணமாக வாரணாசி சென்ற போது 1.25 மணி நேரம் தாமதமாகவே வாரணாசியை அடைந்தது.

இதைப்போல அங்கிருந்து டெல்லி திரும்பிய போதும் இதே நிலை நீடித்ததால் டெல்லிக்கு 1.48 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த வேகக்குறைப்பு எடுக்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  #VandeBharatExpress
Tags:    

Similar News