செய்திகள்

புல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்

Published On 2019-02-17 10:50 GMT   |   Update On 2019-02-17 10:50 GMT
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் தியாகத்துக்கு மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் தனது மணல் ஓவியத்தால் ஒரு பெண் கலைஞர் அஞ்சலி செலுத்தியுள்ளார். #Pulwamaattack #Sandartist #Sandartisttribute #Juhubeach
புவனேஸ்வர்:

மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் தள்ளுவண்டியில் ‘வடா பாவ்’ (நொறுக்குத்தீனி) வியாபாரம் செய்துவருபவரின் மனைவி லக்‌ஷ்மி கவ்ட். வியாபார நெருக்கடி இல்லாமல் ஓய்வாக இருக்கும்போது ஜுஹு கடற்கரையில் மணல் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் ஒரு டன் மணலை பயன்படுத்தி, 9 மணிநேர உழைப்பில் மூவர்ண கொடியின் நிறத்தில் அழகிய மணல் ஓவியம் ஒன்றை நேற்று மாலை உருவாக்கி முடித்தார்.


இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜுஹு கடற்கரைக்கு வருகைதரும் மக்கள் இந்த மணல் ஓவியத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.



இதேபோல் ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரை மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடற்கரையில் மணல் ஓவியங்கள் மூலம் புல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. #Pulwamaattack #Sandartist #Sandartisttribute #Juhubeach

Tags:    

Similar News