செய்திகள்

புல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி - போபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய மெழுகுவர்த்தி பேரணி

Published On 2019-02-16 14:36 GMT   |   Update On 2019-02-16 14:36 GMT
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போபால் நகரில் பாதுகாப்பு படையினர் குடும்பத்தாருடன் மெழுகுவர்த்திகளை ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர். #PulwamaAttack #BhopalCandleMarch
போபால்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டார்.



இந்நிலையில், மத்தியப்பிரதேசம், போபால் நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிகாரிகளும் வீரர்களும் தங்களது குடும்பத்தாருடன் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தியவாறு அமைதி பேரணி நடத்தி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். #PulwamaAttack #BhopalCandleMarch #candlemarch
Tags:    

Similar News