செய்திகள்

அல்லாஹ்வின் ஆசியுடன் அயோத்தியில் இந்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்படும் - பா.ஜ.க. பிரமுகர் கருத்து

Published On 2019-02-06 10:27 GMT   |   Update On 2019-02-06 11:39 GMT
அயோத்தியில் இந்த ஆண்டுக்குள் அல்லாஹ்வின் ஆசியுடன் ராமர் கோவில் கட்டப்படும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். #Ramtemple #blessingsofAllah #BukkalNawab
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்ற மேல்சபையில் பா.ஜ.க. உறுப்பினராக பதவி வகிப்பவர், புக்கால் நவாப். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் ராமருக்கு தங்கத்தால் கிரீடம் செய்வதற்கு 15 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக முன்னர் இவர் தெரிவித்திருந்தார்.

தனது நேர்த்திக்கடன் ஹனுமானால் பூர்த்தியானதற்கு நன்றி தெரிவிப்பதாக 30 கிலோ எடைகொண்ட பித்தளை மணியை ஹனுமான் கோவிலுக்கு புக்கால் நவாப் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.



மேலும், அர்மான், ரஹ்மான், ரம்ஜான், பர்சான் என்னும் பெயர்களைப்போல ஹனுமான் என்ற பெயரும் உள்ளதால் ஹனுமான் ஒரு முஸ்லிம் என்று நம்புவதாகவும் இவர் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அல்லாஹ்வின் ஆசியுடனும் பா.ஜ.க.வினரின் முயற்சியாலும் அயோத்தியில் இந்த ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் என தற்போது தெரிவித்துள்ள புக்கால் நவாப், மோடியின் பிரபலத்தை கண்டு அச்சப்படும் எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை வீழ்த்தும் ஒரே நோக்கத்துக்காக சுயநலக் கூட்டணி அமைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். #Ramtemple #blessingsofAllah #BukkalNawab
Tags:    

Similar News