செய்திகள்

மும்பையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி டான்ஸ் பார்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

Published On 2019-01-17 09:38 GMT   |   Update On 2019-01-17 09:38 GMT
மும்பையில் டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு நடன அழகிகளும், டான்ஸ் பார் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #DanceBars #SC
புதுடெல்லி:

மும்பையில் நட்சத்திர ஓட்டல்கள் தவிர சிறிய மது பார்களில் நடனம் அனுமதிக்கப்படுகிறது.

டான்ஸ் பார்களில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாகவும், பெண்களை சித்ரவதை செய்வதாகவும் கூறி மராட்டிய அரசு டான்ஸ் பார்களுக்கு தடை விதித்தது.

அதன்பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் டான்ஸ் பார்களுக்கு அரசு அனுமதி அளித்தது. டான்ஸ் பார்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்பட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து டான்ஸ் பார் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி அனுமதி அளித்தது.

டான்ஸ் பார்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்ற மராட்டிய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். நடனம் ஆடும் பெண்கள் மீது பணத்தை வாரி இறைக்க கூடாது, நடனமாடும் மேடையும், மது அருந்தும் மேடையும் அருகருகே இருக்க கூடாது போன்ற நிபந்தனைகள் விதித்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நடன அழகிகளும், டான்ஸ் பார் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #DanceBars #SC
Tags:    

Similar News