செய்திகள்

மனைவியை கொன்ற வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரர் போலீஸ் காவலில் மரணம்

Published On 2018-12-03 11:11 GMT   |   Update On 2018-12-03 11:11 GMT
கர்நாடக மாநிலத்தில் குடும்ப தகராறில் மனைவியை கொன்றதாக கைதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் போலீஸ் காவலில் இன்று மரணம் அடைந்தார். #RetiredSoldier #Murderaccused #policecustody
பெங்களூரு:

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு புறநகர் பகுதியான கல்காரே என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி(53). ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற இவர் தனியார் நிறுவனத்தில் மின்தூக்கி இயக்குனராக (லிப்ட் ஆபரேட்டர்) பணியாற்றி வந்தார்.

குடும்ப தகராறில் தனது மனைவி மேகலா தேவி என்பவரை கடந்த மாதம் 20-ம் தேதி இவர் கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து, போலீசார் கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து விசாரித்து வந்தனர்.

மேகலாவை கொன்றதாக ஒப்புக்கொண்ட கிருஷ்ண மூர்த்தி கொலைக்காக பயன்படுத்திய கத்தியை தூக்கி வீசிய இடத்துக்கு போலீசார் இன்று அவரை அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது போகும் வழியில் கிருஷ்ண மூர்த்தி மரணம் அடைந்தார்.

போலீஸ் காவலில் அவர் இறந்ததால் இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #RetiredSoldier  #Murderaccused #policecustody
Tags:    

Similar News