செய்திகள்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அர்ஜென்டினா பயணம்

Published On 2018-11-27 12:42 GMT   |   Update On 2018-11-27 12:42 GMT
அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். #ModileaveArgentina #G20summit
புதுடெல்லி:

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.

கோப்புப்படம்

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். டிசம்பர் 2-ம் தேதி அவர் தாயகம் திரும்புகிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங்-ஐ பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்துவார் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று தெரிவித்துள்ளார். #ModileaveArgentina  #G20summit
Tags:    

Similar News