செய்திகள்

சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Published On 2018-11-19 07:10 GMT   |   Update On 2018-11-19 07:10 GMT
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
புதுடெல்லி:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இந்த மனுக்கள் மீது திறந்த நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடத்தவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சபரிமலை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டாலும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை.



இந்நிலையில், சீராய்வு மனுக்களை விரைந்து விசாரிக்கும்படி மனுதாரர்கள் கூறி வருகின்றனர். அதனை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

அவ்வகையில், மனுதாரர் மேத்யூ நெடும்பராவின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறியது. பெண்களை அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தேவசம்போர்டு அவகாசம் கோர உள்ளது குறிப்பிடத்தக்கது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
Tags:    

Similar News