செய்திகள்

எந்திர கோளாறால் அரசு ஊழியர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்ந்தது - பஞ்சாப்பில் ருசிகரம்

Published On 2018-11-05 00:50 GMT   |   Update On 2018-11-05 01:40 GMT
எந்திர கோளாறு காரணமாக பஞ்சாப் அரசு ஊழியர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Amristar #GovtEmployees #DoubleSalary
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் சம்பளமாக இரு மடங்கு சம்பளம் தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தியுள்ளனர் என ஊழியர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என அரசு ஊழியர்கள் புலம்பியபடி தங்களது வேலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

கூடுதலாக ஒருமாத சம்பளமாக 40 முதல் 50 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடட்த்தக்கது. #Amristar #GovtEmployees #DoubleSalary
Tags:    

Similar News