செய்திகள்

விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கத்திக்குத்து - கையில் பலத்த காயம்

Published On 2018-10-25 09:52 GMT   |   Update On 2018-10-25 10:33 GMT
விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் ஜெகன் மோகன் ரெட்டியை ஒரு நபர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #JaganMohanReddy #Visakhapatnamairport
விசாகப்பட்டினம்:

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்டார். இதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய விஐபி பகுதியை நெருங்கியபோது, அவரை நோக்கி வந்த நபர் திடீரென கத்தியால் அவரை வெட்டியுள்ளார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

உடனே அருகில் இருந்த தொண்டர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஐதராபாத் விமானத்தில் ஏறி பயணம் செய்தார்.



இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் விமான நிலைய கேண்டீனில் வேலை செய்யும் நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபர் ஜெகன் மோகன் ரெட்டியின் கழுத்தை குறிவைத்து வெட்டியதாகவும், ஜெகன் மோகன் ரெட்டி கையால் தடுத்ததால் உயிர்தப்பியதாகவும் அவருடன் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.

இது எதிர்க்கட்சி தலைவரை கொல்வதற்கு தெலுங்குதேசம் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கொலை முயற்சி என்றும், விமான நிலையத்திற்குள் நகம் வெட்டும் கருவியைக் கூட போலீசார் அனுமதிக்காத நிலையில், குற்றவாளியால் எப்படி கத்தியை எப்படி கொண்டு வர முடிந்தது? என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார்.  #JaganMohanReddy #Visakhapatnamairport




Tags:    

Similar News