செய்திகள்

டெல்லியில் தேசிய போலீஸ் நினைவிடம், சீருடை பணியாளர் அருங்காட்சியகம் - மோடி திறந்து வைத்தார்

Published On 2018-10-21 09:57 GMT   |   Update On 2018-10-21 09:59 GMT
கடமையின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்காக டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம், சீருடை பணியாளர் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். #PMModi #khakiforcesmemorial
புதுடெல்லி:

சீனாவுக்கும் இந்தியாவுக்கு இடையில் கடந்த 1959-ம் நடைபெற்ற மோதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். அவர்களையும், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு முழுவதும்  கடமையின்போது வீரமரணம் அடைந்த சுமார் 35 ஆயிரம் போலீசாருக்காக டெல்லி சானக்புரி பகுதியில் நினைவிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிட வளாகத்தில் சீருடைப் பணியாளர்கள் என அழைக்கப்படும் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரின் அருங்காட்சியகமும் உள்ளது. காலகாலமாக நமது வீரர்கள் பயன்படுத்தி வந்த சீருடை, ஆயுதங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 21-10-1943 அன்று வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிப்பதாகவும் இனி நமது நாடு சுதந்திர பூமி என்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அறிவித்தார். இனி நமது நாடு ‘ஆசாத் ஹிந்த் அரசு’ (சுதந்திர இந்திய அரசு) என்றழைக்கப்படும் என அவர் பிரகடனப்படுத்தினார்.

இப்படி அவர் வீரமுழக்கம் செய்த நாள் வீர வணக்க நாளாக ஆண்டுதோறும் வீரவணக்க நாளாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் டெல்லியில் 6.12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் மற்றும் சீருடை பணியாளர் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.



இந்த நினைவிடத்தில் 30 அடி உயரத்தில் 238 டன் எடையுடன் கருப்பு நிற கிரானைட் கல்லில் அமைக்கப்பட்டுள்ள வீரவணக்க தூணுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஏராளமான மந்திரிகள், இணை மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். #PMModi #khakiforcesmemorial
Tags:    

Similar News