செய்திகள்

ராகுல் காந்தி பேரணியில் பலூன்கள் வெடித்து திடீர் தீ விபத்து

Published On 2018-10-07 15:48 GMT   |   Update On 2018-10-07 15:48 GMT
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் ஆரத்தி எடுக்க முயன்ற போது அருகில் இருந்த பலூன்கள் வெடித்ததால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. #RahulGandhi
போபால் :

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில்,  சத்தீஷ்கார், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், ஜபால்பூர் மாவட்டத்தில் 8 கிமீ தொலைவு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தார். அவரை வரவேற்கும் விதமாக சாலை நெடுகிலும் கட்சி கொடிகளுடனும், வண்ண வண்ண பலூன்களுடனும் தொண்டர்கள் காத்து இருந்தனர்.

அப்போது சில தொண்டர்கள் ராகுல்காந்திக்கு ஆரத்தி எடுப்பதற்காக வாகனத்தை நோக்கி வந்தனர். ஆரத்தி எடுக்கும் போது நெருப்பு அருகில் உள்ள பலூன் மீது படவே தீ பற்றிக்கொண்டது. தீ பலூன் மீது படவே பட பட வென வெடித்து சிதறியது. ஆனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து ராகுல்காந்தி சற்றி தள்ளி இருந்தார். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ராகுல்காந்தி திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது தீவிபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #RahulGandhi
Tags:    

Similar News