செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மனைவி இடைத்தேர்தலில் போட்டி

Published On 2018-10-06 08:04 GMT   |   Update On 2018-10-06 08:04 GMT
கர்நாடகாவில் ராம்நகர் தொகுதியில் மத சார்பற்ற குமாரசாமியின் மனைவி அனிதாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. #AnithaKumaraswamy
பெங்களூர்:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில், மதசார் பற்ற ஜனதாதள மாநில தலைவர் குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

அவர் நின்ற செனப்பட்டனா, ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார்.

இதையடுத்து ராம்நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இந்தநிலையில் ஜம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிந்துநியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார்.

தற்போது காலியாக உள்ள ராம்நகர், ஜம்கண்டி ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது.

இந்த தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ராம்நகர் தொகுதியில் மத சார்பற்ற குமாரசாமியின் மனைவி அனிதாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இதை அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, ராம்நகர் தொகுதியில் அனிதா போட்டியிடுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #AnithaKumaraswamy
Tags:    

Similar News