செய்திகள்

ஐ.நா. இல்லத்தை டெல்லியில் திறந்து வைத்தார் அன்ட்டோனியோ குட்டரஸ்

Published On 2018-10-01 15:52 GMT   |   Update On 2018-10-01 15:52 GMT
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ், ஐநா இல்லத்தை டெல்லியில் இன்று திறந்து வைத்தார். #UN #AntonioGuterres #Delhi #UNHouse
புதுடெல்லி:

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள் IORA என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான கருத்தரங்கம் நாளை புதுடெல்லியில் நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மற்றும் பிறநாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக நான்கு நாள் பயணமாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் இந்தியா வந்துள்ளார்.



இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ், டெல்லியில் ஐ.நா. இல்லத்தை இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டையும் அக்டோபர் மூன்றாம் தேதி அன்ட்டோனியோ குட்டரஸ் துவக்கி வைக்க உள்ளார். #UN #AntonioGuterres #Delhi #UNHouse
Tags:    

Similar News