செய்திகள்

ரபேல் போர் விமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன - ராஜ்நாத் சிங்

Published On 2018-09-30 19:27 GMT   |   Update On 2018-09-30 19:37 GMT
ரபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். #RafaleDeal #RajnathSingh
சண்டிகர் :

பிரான்ஸ் - இந்தியா இடையிலான ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அனில் அம்பானி ஆதாயம் அடைந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்.

இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்தின் போது ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரை செய்ததால் வேறு வழியின்றி ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹொலான்டே, சமீபத்தில் அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அவரது பேட்டி வெளியான பிறகு இந்தியாவில் ரபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு அரசுக்கு எதிராக கேள்விக் கனைகளை தொடுத்து வருகின்றனர். அரசும் அவர்களுக்கு காட்டமான பதிலடி கொடுத்து வருவதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரபேல் போர் விமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், ரபேல் ஒப்பந்தம் தற்போதைய மோடி ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டது அல்ல, முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் நீட்சியே இந்த ஒப்பந்தம். மேலும், ரபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சாத்தியமில்லாதது.

எனவே, மத்திய அரசின் மீது பொய்களை கட்டவிழ்த்துவிடும் எத்ரிக்கட்சிகள், மக்களை தவறாக வழிநடத்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்வதாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். #RafaleDeal #RajnathSingh
Tags:    

Similar News