செய்திகள்

குடிபோதையில் பஸ்சை ஓட்டிய தமிழக டிரைவர் கைது

Published On 2018-09-21 11:15 GMT   |   Update On 2018-09-21 11:15 GMT
கொழிஞ்சாம்பாறை அருகே குடிபோதையில் தமிழக அரசு பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கொழிஞ்சாம்பாறை:

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜகாடு பகுதிக்கு நேற்று மாலை 5 மணிக்கு தமிழக அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

இதனை டிரைவர் கார்த்திகேயன் ஓட்டி சென்றார். பஸ்சில் 80 பயணிகள் இருந்தனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதி வேகமாக சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் டிரைவரிடம் மெதுவாக செல்லுமாறு கூறினார்கள். இந்த நிலையில் சற்று தூரம் சென்றதும் அங்கு சென்று கொண்டிருந்த 2 ஜீப் மீது மோதியது.

மாலை 6 மணியளவில் இந்த பஸ் தோட்டிமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் ரோடு வேலை நடைபெற்று வருகிறது. இதற்காக ஜே.சி.பி. எந்திரம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அப்பகுதியில் அரசு பஸ் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோடு ஓரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. பின்னர் சரிய தொடங்கியது.

இதனை பார்த்த ஜே.சி.பி. டிரைவர் ரதிஷ் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சென்று பஸ்சை சரிய விடாமல் தடுத்து நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இது குறித்து சோத்தம் பாறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News