செய்திகள்

கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - நள்ளிரவு முதல் போராடும் தீயணைப்பு வீரர்கள்

Published On 2018-09-16 06:07 GMT   |   Update On 2018-09-16 06:07 GMT
கொல்கத்தாவில் உள்ள பிரசித்தி பெற்ற பக்ரி மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். #KolkataFireAccident #bagriMarketFire
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா. இங்கு உள்ள பிரசித்தி பெற்ற பக்ரி சந்தையில் நள்ளிரவு இரண்டரை மணியளவில் தீப்பிடித்துள்ளது. இந்த தீ அடுத்த சில நிமிடங்களில் அனைத்து கடைகளுக்கும் பரவி மிகப்பெரிய தீ விபத்தாக மாறியது.

இந்த தீ விபத்து குறித்து நேரில் பார்த்த சிலர் கூறுகையில், நடைபாதையில் ஏற்பட்ட சிறு தீ, கடைகளில் பரவியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர்.



இதையடுத்து, தீ விபத்து குறித்து நள்ளிரவே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் மிக கடுமையாக போராடி வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தீவிபத்தை அடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KolkataFireAccident #bagriMarketFire
Tags:    

Similar News