செய்திகள்

உ.பி.யில் நேரு சிலை அகற்றம் - காங்கிரஸ் கடும் கண்டனம்

Published On 2018-09-15 00:30 GMT   |   Update On 2018-09-15 00:30 GMT
உத்தரப்பிரதேசத்தில் சாலையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். #Allahabad #JawaharlalNehruStatue #Congress
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடத்த முடிவாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அலகாபாத் நகரில் சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலையை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதையடுத்து, சாலையில் வைக்கப்பட்டு இருந்த ஜவஹர்லால் சிலையை நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து அகற்றினர்.



நேரு சிலை அகற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்பகுதி காங்கிர்ஸ் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள் ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது யோகி ஆதித்யநாத்தின் பழிவாங்கும் செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அதே பகுதியில் உளள பூங்கா ஒன்றில் நேரு சிலை அமைக்கப்படும் என தெரிவித்தனர். #Allahabad #JawaharlalNehruStatue #Congress
Tags:    

Similar News