செய்திகள்

ராகுல் காந்தி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்தார் - சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

Published On 2018-09-13 23:10 GMT   |   Update On 2018-09-13 23:10 GMT
ராகுல் காந்தி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்ததாக சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா புகார் கூறியுள்ளார். #RahulGandhi #NiravModi
புதுடெல்லி:

நிதி மந்திரி அருண் ஜெட்லியை, விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச்செல்லும் முன்பு பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதனை காங்கிரஸ் எம்.பி. புனியா பார்த்தார் என்று ராகுல் காந்தி புகார் கூறினார். இந்த புகார் கூறிய சிறிது நேரத்தில் சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா, ராகுல் காந்தி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்தார் என புகார் கூறினார்.



2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி டெல்லி இம்பீரியல் ஓட்டலில் நடந்த ஒரு திருமண மது விருந்தில் ராகுல் காந்தி நீரவ் மோடியை நீண்டநேரம் சந்தித்து பேசினார். நீரவ் மோடிக்கும், அவரது உறவினர் மொகுல் சோக்சிக்கும் தவறாக கடன் வழங்கிய அதே காலகட்டத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ராகுல் காந்தியின் பாதுகாப்பு படையினரிடம் இதற்கான ஆவணங்கள் இருக்கும். இதனை ராகுல் காந்தி மறுக்க தயாரா? அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? இதை தவறு என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று பூனாவாலா கூறியுள்ளார். ஆனாலும் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது. #RahulGandhi #NiravModi 
Tags:    

Similar News