செய்திகள்

ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது

Published On 2018-09-12 02:24 GMT   |   Update On 2018-09-12 02:24 GMT
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. #Earthquake #JammuKashmir #Haryana
கடந்த சில நாட்களாகவே டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் அடிக்கடி லேசனா நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அண்டை நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக இங்கு லேசான நில அதிர்வு உணரப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாவில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 5.15 மணியளவில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகி உள்ளது. இந்த அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.



அதேபோல் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1-ஆக பதிவாகியுள்ளது. #Earthquake #JammuKashmir #Haryana

Tags:    

Similar News