செய்திகள்

கவர்னருக்கு கருணை மனு அளித்தார் கடவுளின் அவதாரம் எனக்கூறிய ஆசாராம் பாபு

Published On 2018-09-11 09:12 GMT   |   Update On 2018-09-11 10:47 GMT
சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாமியார் ஆசாராம் பாபு, தண்டனையை குறைக்குமாறு ராஜஸ்தான் கவர்னருக்கு கருணை மனு அளித்துள்ளார். #Asaram #MercyPlea #Rajasthan
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே, 16 வயது தனது சீடரை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர் தனது பல்வேறு பெண் சீடர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழ்ந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆசாராம் பாபுவுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தாம் தான் கடவுள் என்று சொல்லிக்கொண்ட சாமியார் ஆசாராம் பாபு, தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். இந்நிலையில், தனது ஆயுள் தண்டனையை குறைக்குமாறு ராஜஸ்தான் கவர்னருக்கு கருணை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் வயது மூப்பின் காரணமாக தனது ஆயுள் தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மாவட்ட நிர்வாகம் மற்றும் சிறைத்துறை, காவல்துறைக்கு அனுப்பப்பட்டு, பதிலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஆசாராமின் கருணை மனு மீது மேற்கண்ட நிர்வாகம் பதிலளித்த உடன், மனு சிறைத்துறை பொது இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Asaram #MercyPlea #Rajasthan
Tags:    

Similar News