செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச குடை - கொல்கத்தா நகராட்சியின் புதிய திட்டம்

Published On 2018-09-09 11:34 GMT   |   Update On 2018-09-09 11:34 GMT
பள்ளி சீருடை, ஷூ ஆகியவற்றை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக குடை வழங்கும் திட்டத்தை கொல்கத்தா நகராட்சி அறிவித்துள்ளது. #FreeUmbrellas #KolkataMunicipalCorporation
கொல்கத்தா:

அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன. மேலும், மாணவர்களுக்கு தேவைப்படும் சீருடைகள், ஷூக்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகராட்சி மாணவ, மாணவியருக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளது.



கோடைக்காலத்தில் வெயிலில் இருந்து மாணவர்கள் தப்பிக்கவும், மழைக்காலத்தில் மாணவர்களின் வருகை குறைவை தடுக்கும் வகையிலும், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #FreeUmbrellas #KolkataMunicipalCorporation
Tags:    

Similar News