செய்திகள்

ம.பி. முதல் மந்திரி கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா

Published On 2018-09-03 20:28 GMT   |   Update On 2018-09-03 20:28 GMT
மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய நிகழ்வான உறியடி விழாவில் பங்கேற்றார். #Janmashtami #ShivrajSinghChouhan
போபால்:

கிருஷ்ண ஜெயந்தி அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய் பால் போன்ற பலவிதமான பண்டங்களை மக்கள் உண்ணுவார்கள். 

பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழா என்று அழைக்கிறோம். இதற்கிடையே, இந்தியா முழுவதும் கோகுலாஷ்டமி விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் போபால் நகரில் நடைபெற்ற உறியடி விழாவில் பங்கேற்றார். 
அதில் அவர் கட்டப்பட்டிருந்த உறியை அடித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பகவான் கிருஷ்ணரின் அருள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கிருஷ்ணரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
 
மாநில மக்களுக்கு எனது கோகுலாஷ்டமி விழாவுக்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிகரமாக இந்த விழாவை நடத்தி முடித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். #Janmashtami #ShivrajSinghChouhan
Tags:    

Similar News