செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்

Published On 2018-09-02 08:52 GMT   |   Update On 2018-09-02 08:52 GMT
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மூன்று வார காலம் சிகிச்சை பெறுவதற்காக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #pinarayivijayan
திருவனந்தபுரம்:

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் உடல் பரிசோதனைக்கு வந்து சென்றார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக சென்னை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

இதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல இருந்தார். அப்போது கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் பினராயி விஜயனின் அமெரிக்கா பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து அவர், இம்மாதம் 3-ம் தேதி  அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கேரள கவர்னரை நேற்று சந்தித்த பினராயி விஜயன், மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PinarayiVijayan #KeralaCMUStreatment
Tags:    

Similar News