செய்திகள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி - மத்திய அரசு திட்டம்

Published On 2018-08-31 03:41 GMT   |   Update On 2018-08-31 03:41 GMT
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. #NEETExam #CentralGovernment
புதுடெல்லி:

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு கட்டாயம் ஆகும். இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர்கல்வி துறையில் நுழைவு தேர்வுகளை நடத்துவதற்கு தேசிய போட்டி தேர்வு முகமை என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,697 மையங்கள் இதற்காக செயல்பட்டு வருகின்றன.



இந்த மையங்களை நீட் பயிற்சி மையங்களாக மாற்றி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பயிற்சி மையங்கள் செப்டம்பர் 8-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான மொபைல் ஆப்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் செப்டம்பர் 1-ந் தேதியில் (நாளை) இருந்து தொடங்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதம் முதல் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிகள் தொடங்க உள்ளன.   #NEETExam #CentralGovernment
Tags:    

Similar News