செய்திகள்

பிரதமர் மோடி ஆகஸ்டு 23ம் தேதி குஜராத் செல்கிறார்

Published On 2018-08-13 22:19 GMT   |   Update On 2018-08-13 22:19 GMT
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #PMModi #Gujarath
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு ஆகஸ்டு 20-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

தற்போது குஜராத் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மோடியின் வருகை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி ஆகஸ்டு 23-ம் தேதி குஜராத் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தின் ஜூனாகத்தில் பன்முக மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். வால்சாத், ஜூனாகத், காந்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். அன்றைய தினமே மோடி டெல்லி திரும்புகிறார் என அத்காரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News