செய்திகள்

ஏழு மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலி -உள்துறை அமைச்சகம் தகவல்

Published On 2018-08-10 20:55 GMT   |   Update On 2018-08-10 20:55 GMT
இந்த மழைக்காலத்தில் ஏழு மாநிலங்களில் மழை, வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலியாகி உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MonsoonFlood
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மழைக்காலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏழு மாநிலங்களில் 718 பேர் பலியாகி உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் 171 பேரும், மேற்கு வங்காளத்தில் 170 பேரும், கேரளாவில் 178 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 44 பேரும், நாகலாந்தில் 8 பேரும் என மொத்தம் 718 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், கேரளாவில் 21 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும் என மொத்தம் 26 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், 244 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. #MonsoonFlood
Tags:    

Similar News