செய்திகள்

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் - பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்

Published On 2018-07-31 22:34 GMT   |   Update On 2018-07-31 22:34 GMT
ஆகஸ்டு 15 சுதந்திரதின உரை குறித்து எண்ணங்கள், கருத்துகளை ‘நரேந்திர மோடி ஆப்’ மூலம் தனக்கு பகிருமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #IndependenceDay #Speech #NarendraModi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 15-ந் தேதி தனது 5-வது சுதந்திர தின உரையாற்ற உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் தனது சுதந்திர தின உரையில் சேர்க்க வேண்டிய கருத்துகள் குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மக்கள் தெரிவிக்கும் சில கருத்துகள் அவரது உரையிலும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டும் அவர் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் வலைத்தளத்தில், “என்னுடைய ஆகஸ்டு 15 உரை குறித்து உங்களது எண்ணங்கள், கருத்துகள் என்ன? அவைகளை இதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பான ‘நரேந்திர மோடி ஆப்’ மூலம் எனக்கு பகிருங்கள். மக்களின் பயனுள்ள ஆலோசனைகள் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்கள் MyGov.in. என்ற வலைத்தள முகவரிக்கும் கருத்துகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்குகள், இடஒதுக்கீடு முறை மற்றும் கல்வி போன்றவை தொடர்பாக சில கருத்துகள் இந்த வலைத்தள முகவரிக்கு வந்துள்ளன.  #IndependenceDay #Speech #NarendraModi  #tamilnews
Tags:    

Similar News