செய்திகள்

பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடரும் - அமித் ஷா

Published On 2018-07-12 12:39 GMT   |   Update On 2018-07-12 12:39 GMT
பீகாரில் நிதிஷ் குமாருடன் எங்கள் கூட்டணி தொடரும் என பா.ஜனதா தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார். #AmitShah
பாட்னா :

2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

பஞ்சாப்பில் கூட்டணி கட்சியான அகாலி தளம் ஆட்சியை இழந்த நிலையில் மராட்டியத்தில் சிவசேனா கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அமித்ஷா சமரசம் செய்த பின்பும் மோதல் போக்கு நீடிக்கிறது.

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜனதா மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. அங்கு லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்த நிதிஷ்குமார், சில மாதங்களிலேயே லாலுவை உதறி விட்டு பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்கிறார்.

இருப்பினும், அதே சமயம் பா.ஜனதா பெரிய அண்ணன் போல் நடந்து கொள்ளக்கூடாது, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், தொகுதி பங்கீடு சரிசம விகிதத்தில் இருக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனை விதித்திருந்தது.

மேலும், பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்றத் தொகுதிகளில் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், பாட்னாவில் நிதிஷ் குமாரை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பீகாரில் நிதிஷ் குமாருடன் எங்கள் கூட்டணி தொடரும் என அவர் தெரிவித்தார். #AmitShah
Tags:    

Similar News