செய்திகள்

பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும் - சுப்பிரமணியன் சாமி

Published On 2018-07-08 20:30 GMT   |   Update On 2018-07-08 20:30 GMT
தேசிய ஜனநாயக கூட்டணி, தனது வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். #SubramanianSwamy
மும்பை:
 
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பொருளாதார வளர்ச்சிகள் வாக்குகளை கொண்டுவரப் போவது கிடையாது. இந்தியா ஒளிருகிறது என்ற கோஷத்துடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய அரசுக்கு பிரசாரம் மேற்கொண்டார், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 
இதற்கிடையே, மீண்டும் பா.ஜ.க தன்னுடைய நம்பிக்கை (இந்துத்துவா) மற்றும் ஊழலற்ற அரசு என வாக்குறுதி அளித்தது. இதனால் 2014-ல் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்துத்துவா மட்டுமே பா.ஜ.க.வுக்கு உதவும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அதற்கான வேலைகளை பா.ஜ.க. தொடங்கி வருகிறது. அதன் பணிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். இப்போது இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை, அதுகுறித்து பேச நான் நிதி மந்திரி கிடையாது என தெரிவித்துள்ளார். #SubramanianSwamy
Tags:    

Similar News