செய்திகள்

ஆகாயத்தில் மிதந்தவாறு யோகா செய்து அசத்திய விமானப்படை வீரர்கள்

Published On 2018-06-21 14:57 GMT   |   Update On 2018-06-21 14:57 GMT
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விமானத்தில் இருந்து குதித்து ஆகாயத்தில் மிதந்தபடி விமானப்படை வீரர்கள் இருவர் யோகா செய்துள்ளனர். #InternationalYogaDay2018
லக்னோ :

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு அதை ஏற்று 175 நாடுகளின் ஆதரவுடன் ஜூன் மாதம் 21-ந்தேதியை “உலக யோகா தினம்” ஆக கொண்டாட தீர்மானம் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி உலக யோகா தினம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இன்று (வியாழக்கிழமை) சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது.



அதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை வீரர்களான சன்யால் மற்றும் கஜானந்த் யாதவ் இருவரும் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து யோகா செய்து அசத்தினர். அவர்கள் இருவரும் வாயு நமஸ்கார ஆசனம் மற்றும் வாயு பத்மாசனம் ஆகியவற்றை ஆகாயத்தில் மிதந்தவாறு செய்தனர். #InternationalYogaDay2018
Tags:    

Similar News